Wednesday, November 14, 2012

Filled Under: , , ,

அமீரகத்தில் அக்கரைப்பற்று!!

விடுமுறைகளை காத்திருக்கும் என் போன்றவர்களுக்கு ஆசுவாசம் தருவது ஊரார்களின் ஒன்று கூடல்கள்தான். அதிலும் பெருநாள் தினங்கள் இன்னும் சிறப்பு. எப்போதோ கண்ட நண்பர்கள் உறவுகள் , நண்பர்கள் என ஒன்றுகூடும் போது மகிழ்ச்சி கொஞ்சம் கூடத்தான் இருக்கும். அதிலும் எங்களுக்கென்றிருக்கும் நையாண்டி நக்கல் ட்ரேட் மார்க்குகளுடன் நண்பர்கள்  (றமீஸ் , நஜீப் )வருகின்றபோது ஏதோ ஊரில் இருப்பது போன்ற பிரமை அடிக்கடி உண்டாவது இயல்புதானே. அதோடு இன்னும் பள்ளித்தோழர்களும் இணைந்தால்.!! சொல்லவும் வேண்டுமா?

பல பெருநாட்கள் அமீரகத்தில் கழிந்திருக்கின்றன. பல – சாதாரண நாட்களை விட மோசமாகவும் கழிந்திருக்கின்றன. ஆனால் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் அப்படி இருக்கவில்லை. எல்லாம் மேற்சொன்ன சிறாப்புக்களால்தான். அதோடு சேர்த்தியாக –நான் ஒரு குடும்பஸ்தன்!!

காலையில் இருந்தே நண்பர்களை பார்க்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிலும் சமீரைக் கண்டு பல மாதங்களாகி இருந்ததால் அவனையும் அவன் தாடியையும் சுகம் விசாரிக்கும் காட்சி காலையில் இருந்தே கண்முன் விரிந்தோடிக் கொண்டிருந்தது.

முஸ்ரிஃப் பூங்கா! துபாயில் ஒரு வித்தியாசமான நிலவமைப்புடன் பரந்து விரிந்து கிடந்தது. சஹியின் காரினை விட்டு இறங்கியவுடன் முதலில் என்னை வரவேற்றது நஜீப்பின் குதுகலமான சிரிப்பும் ரமீஸின் பகிடிகளும்தான். இருவரையும் சுற்றி ஒரே அக்கரையூரார்கள்! உணமையில் அது ஊரில் இருப்பது போன்ற ஒரு பிரமையினை ஒரு கணம் உண்டாக்கித்தான் போனது. கூட்டத்தில் நானும் இணைந்து கொண்டேன். பெண்கள் மறுபக்கம் அரட்டையினை தொடர நாங்கள் நண்பர் ரமீஸ் மற்றும் நஜீப் தலைமையில் அரட்டையினை தொடர்ந்து கொண்டிருந்தோம். நாங்களும் யூத்துத்தான் என நிருபிக்கவோ என்னவோ வயதான ! இளைஞர்கள் விளையாடத் தொடங்கினர்.

நேரம் கரைந்தது சாப்பாடு வந்ததன் பின்னர்தான் உறைத்தது. சார்ஜா விலிருந்து இலங்கை உணவகத்தில் சஹன் சாப்பாடுகள் தருவிக்கப்பட்டிருந்தன. மதிய வேளையில் இன்னும் சிலர் கூடி இருந்தனர். சரூத் காக்கா மற்றும் அபுதாபி நண்பர் என எண்ணிக்கை இன்னும் கூடியதால் குதூகலம் இன்னும் ரெட்டிப்பாகித்தான் போனது.

பூங்காவில் இருந்த பள்ளியில்  அன்றைய ஜும்மா பிரசங்கம் பற்றிய கவலைகளுடன் ஜும்மா தொழுதுவிட்டு, சாப்பிட சஹனுக்குள் அனைவரும் இறங்தி தூர் வாரத் தொடங்கினார்கள் ( அவ்வளவு பெரிய சஹன்) எல்லோரும் சஹனை முடிக்க திணறிக்கொண்டிருக்க சமீர் , நஜீப் றமீஸ் சஹன் மட்டும் … வேணாம் .. கண்பட்டுவிடும் விடுங்கோ!!

உண்ட களைப்பில் அனைவரும் மீண்டும் மரநிழல்களில் ஒதுங்க, ஒரு குழு சீட்டுக்கட்டுக்களுடன் உட்கார, மற்றொரு குழு மீண்டும் யூத் என நிரூபிக்க பந்துடன் களமிறங்கியது. அதிலும் அவர்கள் இன்னும் இரண்டு அரபு இளைஞர்களை இணைத்துக் கொண்டு களமிறங்கியது இன்னும் சுவாரசியம். இளைஞர்கள் இளைஞர்கள்தான்!! அதில் மூத்த இளைஞர் நிறூஸ் எப்போதும் காற்பந்துடனே காணப்பட்டார். J சீட்டுக் கச்சேரி மறுபக்கம் றமீஸ் சமீரோடு களைகட்டிக் கொண்டிருக்க , இரண்டுக்கும் பார்வையாளர்களாக மற்றவர்கள் மாறி இருந்தனர்.

அந்தி சாய்கின்ற வேளையில் அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாக – இடம் தேடிக்கிளம்பிய நஜீப் குழுவினருடன் நானும் இணைந்து கொண்டேன். அதே கேலி கிண்டல்களுடன், Barbecue க்கான இடம் ஒன்றினை தெரிந்தெடுத்து போய் உட்கார்ந்து கொண்டோம். உணமையில் இவ்வாறான ஒன்றுகூடல்கள் தருகின்ற உற்சாகங்கள் சம்பள நாட்களில் கூட கிடைக்காது என எண்ணத் தோன்றியது J 

பிறகு முன்னரே தயார் படுத்தி வைத்திருந்த இறைச்சிகளையும் அதற்கான ஏனைய ஏற்பாடுகளையும் அனைவரும் ஒருங்கிணைக்க, Barbecue படலம் இனிதே ஆரம்பமானது. இனியா மாலையில் இன்னும் சில நண்பர்கள் இணைஅந்து கொள்ள இஅடம் திருவிழா போலானது. சுவாரசியமான உரையாடல்கள் குசல விசாரிப்புக்கள் சுட்டிறக்கப்படும் இறைச்சிகளுடன் இனிதே இரவு கழிந்து கொண்டிருந்தது.

காலையில் தொடங்கிய கொண்டாட்டம் இரவு 10 மட்டுக்கு Barbecue அடுப்பு அணைக்கப் படும் வரை தொடர்ந்தது. 

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹஜ்ஜுப்பெருநாளில் பிரம்மச்சாரிகளாக கலந்து கொண்ட பலர் இன்று குடும்பஸ்தர்களாக அதே போன்றதொரு ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையில் இணைந்து மகிழ்ந்தது உணமையில் மறக்க முடியாததுதான்.

இனியும் ஒன்று கூடுவோம் நாண்பர்களே!!

2 comments:

  1. It was a real piece of JOY we had with all our dear friends. Thank you guys specially for all who came from Abu Dhabi.

    Happy new year mates..

    Najeeb A.L.

    ReplyDelete