Saturday, December 22, 2012

ஏய் நீ ரொம்ப அழுக்கா இருக்கே!

முழுவதும் மீசை ,தாடி , கர கர என குரல்கள் என கேட்டுக் கொண்டிருந்த எங்களது அலுவலகத்திற்கு புதிதாக ஒரு குயில் கூவ வந்திருந்தது. ஆகா……. இருந்த வாலிப வயோதிப அன்பர்கள் அனைவருக்கும் ஏக குஷி! அது ஏனோ தெரியவில்லை. பால் ஈர்ப்பு என்பது எப்போதும் ஆண்களுக்கு கொஞ்சம் அதிகமோ என பல தடவைகளில் எண்ணியதுண்டு. 

அவள் – 25 வயதுக்குள் இருக்கும். அழகியும் இல்லை, சுமாராகவும் இல்லை. பொறுத்துக் கொள்ளலாம் ;).  இருப்புக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு (Inventory Control) வந்திருந்தாள் – மும்பையை சேர்ந்தவள். நுனி நாக்கு ஆங்கிலமும், அதிகாரமும் கொஞ்சம் தூக்கலாக இருந்தன. ஆனாலும், ரசிகர்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. அதிலும், சிலர் தீவிர விசிறியாக அல்லது விசிறியாக்கப்பட்டிருந்தனர்.  அந்த தீவிர விசிறிக்கூட்டத்தில் ஒருவர் எனது நண்பர். நண்பர் காணும் போதெல்லாம், அவளைப்பற்றிய துதிபாடல்களை பாடிக்கொண்டே இருந்தார். அதற்கு இன்னும் ஒரு காரணம் அவளின் மேசைக்கு பக்கத்து மேசைக்காரர் நண்பர். இது எங்கு போய் முடியப்போகின்றதோ என்ற எண்ணம் எனக்கு. 

கடந்த சிலவாரங்களில் நண்பரிடம் துதி குறைந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கூர்ந்து கவனித்ததில் முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் கதைக்க சந்த்தர்ப்பம் பார்த்திருக்கும் நண்பர் இப்போது சுவாரசியம் இன்றி இருப்பதும் புரிந்தது. ஆச்சரியம்! என்னவென்று கேட்டுவிடவேண்டும். ! பணி முடிந்து போகும் போது மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

“பிறகு எப்படி போகுது கரெனுடனான வேலைகள்?” என்றவாறு கண்ணடித்தேன். ( அவள் பெயர் - கரென்)

நண்பர் கொஞ்சம் பதட்டப்பட்டது போல பிரமை தட்டியது. சுதாரித்துக் கொண்டே,, 

“இல்லை ச்சும்மாதான் கேட்டேன்” என்றேன்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவர், கொஞ்ச குழப்பமான முகத்துடன் என்னை உற்றுப் பார்த்தார். எதையோ சொல்ல முயற்சித்து முடியாமல் விழுங்குகின்றர் என விளங்கியது.

அதோடு அதை முடித்துவிட்டு நகரத்தொடங்கினோம். 
கொஞ்சநேரத்தின் பின் ஏதோ விழித்துக் கொண்டவர் போல,

“ அவள் எப்போதும் பெர்பியூமுடனே திரிகின்றாள்” என்றார்.

இப்போதுதான் கதையினை ஆரம்பிக்கின்றார் என எண்ணிக்கொண்டு மெதுவாக திரும்பிப்பார்த்தேன். 

“அதனாலென்ன? , அவள் நாகரீகமான பெண். அதானால் இருக்கும்”  இது நான். 

சொல்லிமுடிக்கு முன்,, “ ஆனால் உடுத்திருக்கும் ஜீன்ஸ் க்கு எதற்கு பெர்பியூம்?” சடாரென அவரிடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் குழம்பினேன்.

அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் ஒருவித விசமம் பரவிக்கிடந்தது.
திடீரென பல்ப் எரிந்தது. இதழோரத்தில் புன்னகை ஒன்று எட்டிநிற்க அவரைப்பார்த்தேன். எனக்காக காத்திருந்தவர் போல பெரும் சத்தத்துடன் சிரிக்க தொடங்கினார். நானும் கலந்து கொண்டேன்…

இப்போதெல்லாம், பெர்பியூம் விசிறும் சத்தங்கள் – புன்னகையினை தந்து கொண்டிருக்கின்றன ;)

Tuesday, November 20, 2012

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..


சந்தை விலையினை விட குறைந்த விலையில் பொருட்கள் சேவைகள்கிடைக்கின்ற போது யாராவது வேண்டாம் என்பார்களாஅதைத்தானேமக்கள் நாள்தோறும் தேடிக் கொண்டிருக்கின்றனர்அது மட்டும் இல்லாமல்நுகர்வோரின் இந்த மனநிலையினை வைத்துக் கொண்டுதானேநிறுவனங்கள் “ விலக்கழிவு” “ “தள்ளுபடி விற்பனை” “இரண்டு வாங்கினால்ஒன்று இலவசம் “என்றெல்லாம் கூறிக்கொண்டு நுகர்வோரைகவர்ந்திழுக்கின்றன.

இவ்வாறான நடவடிக்கைகள் நுகர்வோரின்மனநிலையுடன் தொடர்புடையதாகவேஇருக்கின்றதுகுறைந்த விலையில்கிடைக்கின்றதே என்ற காரணம் ஒன்றேநுகர்வோரினை தேவை இல்லாதசந்தர்ப்பங்களைக் கூட தேவைக்குரியதாகமாற்றிவிடுகின்றதுஇதுவே நிறுவனங்களின்வெற்றி என்றே கூறலாம்.

அமீரகத்திலும் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களும்இவ்வகையான சந்தர்ப்பங்களை நிச்சயம் சந்தித்தே  இருப்பார்கள்அதுவும்ஆசிய நாட்டவர்களுக்கு நாட்டுக்கு போகின்ற போது பொருட்கள்கொள்வனவென்பது எழுதப்படாத விதிஅவ்வாறான வேளைகளில் இதுவெற்றியளிக்கும்இது பெரும்பாலும் பண்டங்கள் சார் விலைக் கழிவோதள்ளுபடியோ வாகவே இருக்கும்.

அதே வேளைசேவை சார்ந்த விலைக் கழிவுகளை பெறுகின்றதற்கானவழிவகைகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை பார்த்தால்இருக்கின்றது.அதற்கான வழிமுறைகளை தர , பெறஇப்போது இணையத் தளங்கள் பலவந்துவிட்டன.  இதில் சேவைகள் மட்டுமன்றி பொருட்களுக்கானவிலைக்கழிவு கூப்பன்களும் கிடைக்கப் பெறுகின்றன.

அமீரகத்தினை பொறுத்தவரையில் இவ்வாறான விலைக் கழிவுக்கூப்பன்களை விற்கும் பிரபலமான இணையத்தளங்கள் பல உள்ளனஅவைநிறுவனங்களிடமிருந்து அவர்களின் பொருட்கள் சேவைகளுக்கான விலைக்கழிவினை பெற்று தமது பயனர்களுக்கு அளிக்கின்றது

இதன் மூலம்நிறுவனம் புதிய நுகர்வாளர்களைப் பெறுவதோடுஅவர்களைநிரந்தர வாடிக்கையாளராக்குவதற்கான வாய்ப்பினையும் பெற்றுக்கொள்கின்றது.

இது போன்ற விலைக்கழிவு கூப்பன்கள்பெரும்பாலும் உணவகங்களுக்கானவிலைக்கழிவாகவோ அல்லது ஒன்றிற்குஒன்று இலவசம் என்பது போலவோஇருக்கும்அது மட்டுமன்றி,ஒப்பனைபடுத்தல்மஸாஜ் சேவைகள்என்பவற்றிற்கும் இவ்வாறான விலைக்கழிவினை இவை வழங்குகின்றன.  இதில்உள்ள தந்திரம் என்னவென்றால்ஏனையநுகர்வுப் பண்டங்களுக்கு விலை குறிப்பதுபோலசேவைகளுக்கு விலை இட முடியாது என்பதே!.

இதன் நம்பகத் தன்மை மற்றும் பணபரிவர்த்தனைகள் தொடர்பில் எந்த ஒருமோசடியோவழ்க்களோ இது வரைக்கும்இங்கு நான் கேள்விப் படவில்லை.கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தும்வசதிகள் இருப்பதால் இது போன்றகேள்விகள் எழ வாய்ப்பிருக்கின்றதுஅதைஉறுதி செய்யஇந்த வகையானசேவையினைத் தரும் இணைய தளம்ஒன்றில் இருந்து,

AED9.00 க்கான கரும்பு ஜூஸ் கேன் ஒன்றினை AED 3.00 ற்குகொள்வனவு செய்தேன். ( காசு போனாலும் மூணு திர்ஹம்தானே!!)

அதிலிருந்து இன்றுவரைக்கும் பல உணவகங்களுக்கான விலைக்கழிவுகூப்பன்கள்கையடக்க தொலைபேசிபோன்ற இலத்திரனியல்சாதனங்களுக்கான கூப்பன்களும் கொள்வனவு செய்துஉபயோகித்திருக்கின்றேன்.

அனுபவத்தில் சொல்வதென்றால்உணவகங்களுக்கான் கூப்பன்களைபெறுவதில் மிக்க நன்மையும் லாபமும் உண்டுசில உயர்தட்டுஉணவகங்களுக்கு  நாம் செல்ல இது போன்ற விலைக்கழிவு கூப்பங்களும்ஓரளவுக்கு உதவி செய்யத்தான் செய்கின்றது.

அதே போல்இது ஐக்கிய அரபு ராச்சியத்தில் மட்டுமன்றி பல்வேறுநகரங்களிலும் இச்சேவை உள்ளது.

விரும்புபவர்கள் இணைய தளங்களில் தேடி இச்சேவையினை தரும் தளங்களைகண்டு அதன் நம்பகத்தன்மைகளை நன்றாக  விசாரணை செய்து அதன் சேவைகளைஅனுபவியுங்கள்.

Saturday, November 17, 2012

நான் துபாயில்.........


அடுக்கப்பட்ட பெட்டிகள் போல பிரம்மச்சாரிகள் வாசம்..
அது இங்கு விதிக்கப்பட..
உடைகள் மட்டும் அடுக்கும் இடங்கள் விலக்கி எம்மை சுருக்கிகொள்வோம்.
உறங்கவும் இளைப்பாறவும் என..
காலைகள் போர்க்களமாய் விடியும்..
குளியலறை சாகசங்களுடன்..
இடம்பிடிப்பதும்.. அவசரமான நேரக்கரைதலின் பதைபதைபோடும்..
உடை தேடி, உதறி, மூட்டை தேடி நசுக்கி
பின் ஓரளவு ஒப்பனைகளுடன், சிரிப்பினையும் ஒட்டிக்கொண்டு ஓடுகின்றோம்
மேலாளர்களின் முட்டாள்தனங்களுக்கும் சேர்த்து கடி வாங்கவென..
கரைகின்ற பொழுதின் நீள அகலம் தெரியாத ஓர் தருணம் வயிறு தீயாக
பசி போக்கும் உணவுடன் பொழுது சாய.. மீண்டும் பயணம் தொடங்கும்
குடும்பம், வீடென மாறும் சிந்தனைகள் ..
அலைபேசியூடு கேட்கும் அம்மாவின் குரலுடன் கொஞ்சம் புத்துயிர் பெறும்.
இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக.
ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..
“ நான் துபாயில்..” என









( சும்மா கிறுக்கியவைகள்.. நீங்களும் அனுப்பி வையுங்கள்.. பிரசுரிப்போம் )

Friday, November 16, 2012

, , ,

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களே!


அமீரகம் மட்டுமன்றி பல நாடுகளிலும் உள்ள எமது நண்பர்கள் பல பதவிகளிலும், நல்ல நிலையிலும் இருக்கின்றோம். இதற்கு ஏணியாக இருந்தது எமது பாடசாலையே . இன்றைய இந்த நிலைக்கு முலதனமே நாம் பெற்ற கல்விதான். அதன் ஆரம்பத்தை பெற்றுத்தந்த எமது பாடசாலை இன்னொரு தலைமுறையின் கல்வியினை இன்னும் மெருகூட்ட எமது உதவியினை எதிர்பார்த்து நிற்கின்றது.

மாறிவரும் கற்றல் செயற்பாடுகள், போட்டிமிக்க தொழில்சார் சமூகம் என பல்வேறு தடைகளை முன்னால் கொண்டுள்ள எமது தம்பி தங்கைகளுக்காக ஏன் நாம் சிறு உதவியினை செய்யக்கூடாது?

இதோ எமது பாடசாலை அதிபரின் வேண்டுகோள்

அபுதாபி பார்பிகியூ

எமதூர் நண்பர்கள் முஹர்ரம் விடுமுறைக்காக அபுதாபியில் 15/11/2012 ல் ஒன்றுகூடினர்.  இரவில் நடந்த barbecue ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழுள்ள தொடுப்பில் உள்ளது. விரும்பியவர்கள் தரவிறக்கி கொள்ளுங்கள்.

நிகழ்வுகளின் தொகுப்பினை அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாம்.

Wednesday, November 14, 2012

, , ,

அமீரகத்தில் அக்கரைப்பற்று!!

விடுமுறைகளை காத்திருக்கும் என் போன்றவர்களுக்கு ஆசுவாசம் தருவது ஊரார்களின் ஒன்று கூடல்கள்தான். அதிலும் பெருநாள் தினங்கள் இன்னும் சிறப்பு. எப்போதோ கண்ட நண்பர்கள் உறவுகள் , நண்பர்கள் என ஒன்றுகூடும் போது மகிழ்ச்சி கொஞ்சம் கூடத்தான் இருக்கும். அதிலும் எங்களுக்கென்றிருக்கும் நையாண்டி நக்கல் ட்ரேட் மார்க்குகளுடன் நண்பர்கள்  (றமீஸ் , நஜீப் )வருகின்றபோது ஏதோ ஊரில் இருப்பது போன்ற பிரமை அடிக்கடி உண்டாவது இயல்புதானே. அதோடு இன்னும் பள்ளித்தோழர்களும் இணைந்தால்.!! சொல்லவும் வேண்டுமா?

பல பெருநாட்கள் அமீரகத்தில் கழிந்திருக்கின்றன. பல – சாதாரண நாட்களை விட மோசமாகவும் கழிந்திருக்கின்றன. ஆனால் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் அப்படி இருக்கவில்லை. எல்லாம் மேற்சொன்ன சிறாப்புக்களால்தான். அதோடு சேர்த்தியாக –நான் ஒரு குடும்பஸ்தன்!!

காலையில் இருந்தே நண்பர்களை பார்க்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிலும் சமீரைக் கண்டு பல மாதங்களாகி இருந்ததால் அவனையும் அவன் தாடியையும் சுகம் விசாரிக்கும் காட்சி காலையில் இருந்தே கண்முன் விரிந்தோடிக் கொண்டிருந்தது.

முஸ்ரிஃப் பூங்கா! துபாயில் ஒரு வித்தியாசமான நிலவமைப்புடன் பரந்து விரிந்து கிடந்தது. சஹியின் காரினை விட்டு இறங்கியவுடன் முதலில் என்னை வரவேற்றது நஜீப்பின் குதுகலமான சிரிப்பும் ரமீஸின் பகிடிகளும்தான். இருவரையும் சுற்றி ஒரே அக்கரையூரார்கள்! உணமையில் அது ஊரில் இருப்பது போன்ற ஒரு பிரமையினை ஒரு கணம் உண்டாக்கித்தான் போனது. கூட்டத்தில் நானும் இணைந்து கொண்டேன். பெண்கள் மறுபக்கம் அரட்டையினை தொடர நாங்கள் நண்பர் ரமீஸ் மற்றும் நஜீப் தலைமையில் அரட்டையினை தொடர்ந்து கொண்டிருந்தோம். நாங்களும் யூத்துத்தான் என நிருபிக்கவோ என்னவோ வயதான ! இளைஞர்கள் விளையாடத் தொடங்கினர்.

நேரம் கரைந்தது சாப்பாடு வந்ததன் பின்னர்தான் உறைத்தது. சார்ஜா விலிருந்து இலங்கை உணவகத்தில் சஹன் சாப்பாடுகள் தருவிக்கப்பட்டிருந்தன. மதிய வேளையில் இன்னும் சிலர் கூடி இருந்தனர். சரூத் காக்கா மற்றும் அபுதாபி நண்பர் என எண்ணிக்கை இன்னும் கூடியதால் குதூகலம் இன்னும் ரெட்டிப்பாகித்தான் போனது.

பூங்காவில் இருந்த பள்ளியில்  அன்றைய ஜும்மா பிரசங்கம் பற்றிய கவலைகளுடன் ஜும்மா தொழுதுவிட்டு, சாப்பிட சஹனுக்குள் அனைவரும் இறங்தி தூர் வாரத் தொடங்கினார்கள் ( அவ்வளவு பெரிய சஹன்) எல்லோரும் சஹனை முடிக்க திணறிக்கொண்டிருக்க சமீர் , நஜீப் றமீஸ் சஹன் மட்டும் … வேணாம் .. கண்பட்டுவிடும் விடுங்கோ!!

உண்ட களைப்பில் அனைவரும் மீண்டும் மரநிழல்களில் ஒதுங்க, ஒரு குழு சீட்டுக்கட்டுக்களுடன் உட்கார, மற்றொரு குழு மீண்டும் யூத் என நிரூபிக்க பந்துடன் களமிறங்கியது. அதிலும் அவர்கள் இன்னும் இரண்டு அரபு இளைஞர்களை இணைத்துக் கொண்டு களமிறங்கியது இன்னும் சுவாரசியம். இளைஞர்கள் இளைஞர்கள்தான்!! அதில் மூத்த இளைஞர் நிறூஸ் எப்போதும் காற்பந்துடனே காணப்பட்டார். J சீட்டுக் கச்சேரி மறுபக்கம் றமீஸ் சமீரோடு களைகட்டிக் கொண்டிருக்க , இரண்டுக்கும் பார்வையாளர்களாக மற்றவர்கள் மாறி இருந்தனர்.

அந்தி சாய்கின்ற வேளையில் அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாக – இடம் தேடிக்கிளம்பிய நஜீப் குழுவினருடன் நானும் இணைந்து கொண்டேன். அதே கேலி கிண்டல்களுடன், Barbecue க்கான இடம் ஒன்றினை தெரிந்தெடுத்து போய் உட்கார்ந்து கொண்டோம். உணமையில் இவ்வாறான ஒன்றுகூடல்கள் தருகின்ற உற்சாகங்கள் சம்பள நாட்களில் கூட கிடைக்காது என எண்ணத் தோன்றியது J 

பிறகு முன்னரே தயார் படுத்தி வைத்திருந்த இறைச்சிகளையும் அதற்கான ஏனைய ஏற்பாடுகளையும் அனைவரும் ஒருங்கிணைக்க, Barbecue படலம் இனிதே ஆரம்பமானது. இனியா மாலையில் இன்னும் சில நண்பர்கள் இணைஅந்து கொள்ள இஅடம் திருவிழா போலானது. சுவாரசியமான உரையாடல்கள் குசல விசாரிப்புக்கள் சுட்டிறக்கப்படும் இறைச்சிகளுடன் இனிதே இரவு கழிந்து கொண்டிருந்தது.

காலையில் தொடங்கிய கொண்டாட்டம் இரவு 10 மட்டுக்கு Barbecue அடுப்பு அணைக்கப் படும் வரை தொடர்ந்தது. 

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹஜ்ஜுப்பெருநாளில் பிரம்மச்சாரிகளாக கலந்து கொண்ட பலர் இன்று குடும்பஸ்தர்களாக அதே போன்றதொரு ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையில் இணைந்து மகிழ்ந்தது உணமையில் மறக்க முடியாததுதான்.

இனியும் ஒன்று கூடுவோம் நாண்பர்களே!!

What's Trending?

Text Widget 2

தொடர்வோர்

Contributors

Powered by Blogger.

Popular Posts